மீரா கவிதை-1


விழும்போதெல்லாம்
மீசையில் ஒட்டவேண்டும்
இந்த் செம்மண்;
ஏனெனில் இது எம்மண்!

தமிழ் ஹைக்கூ - 9



வெட்டிப் போட்ட
மரத்துண்டிலும்
துளிர்கள்

தமிழ் ஹைக்கூ - 8


யாருமற்ற தனிமையில்
அறைக்குள் நடனம் பயிலும்
ஊதுபத்தியின் நறுமணம்

தமிழ் ஹைக்கூ - 7


கம்பளி இருந்தும்
சளியுடன் தும்மும்
செம்மறி ஆடு...

கவிஞன் அமுத பாரதி

தமிழ் ஹைக்கூ - 6


ஐயோ இருட்டிவிட்டதே
என் செம்மறி ஆட்டை பார்த்தீர்களா
விடிந்தால் தீபாவளி

ஹைக்கூவின் வீரியம்। ஒர் உதாரணம்.

பக்கம்பக்கமாய் சிறுகதையிலும் கட்டுரையின் வாயிலாகவும் சொல்லப் படவேண்டிய ஒரு கருத்தை மூன்றே வரிகளில் சொல்லி விடலாம் என்பது தான் நம் தமிழ்ஹைக்கூவின் மிகப்பெரிய பலம். அதுவும் கூட அதே கோபத்துடனும் அதே வீரியத்துடனும் சொல்லிவிட முடியும் என்பதற்கு இந்த கவிதை சாட்சி,

இட ஒதுக்கீடு எனக்கு வேண்டாம்
வா....... வந்து
நீயே பீ அள்ளு.
- திண்டுக்கல்.தமிழ்பித்தன்

ஹைக்கூ ஒரு விளக்கம்....

சரியான தமிழ் ஹைக்கூவை எப்படி அடையாளங்கண்டு கொள்வது என்ற கேள்வி எழலாம். மூன்று வரிகளையும் இப்படி பிரித்துக்கொண்டால் மிகச் சுலபம்...

நெறிபடுத்தப்பட்ட வார்த்தைகள்,
காட்சியை கூட்டல் குறைத்தலின்றி அப்படியே பதிவு செய்தல்,
கடைசி வரிக்குள் ஒளித்து வைக்கப் பட்டிருக்கும் அதிர்வலைகள்.

அவ்வளவு தான் அது சிறந்த ஹைக்கூ என்ற முடிவுக்கு வந்து விடலாம். அங்கத தன்மையோடு எழுதப் படுபவை சென்றியூ! ஒரு சின்ன சம்பவத்தை பத்தியில் கூறி.. பின்னால் ஹைக்கூ எழுதினால் அது ஹைபுன்! அந்ததிகளும் கூட தமிழ்ஹைக்கூவில் வந்து விட்டன.

பெரும் வணிக இதழ்கள் ஹைக்கூ கவிதைகளை பிரசுரிக்கின்றன. ஹைக்கூவை முதலில் வெளியிட்டு பின் தொடர்கதைகளும் எழுதப்பட்டு விட்டன.


WWW.VAARPU.COM -இனையதளத்திலிருந்து...

தமிழ் ஹைகூ - 5


இரவெல்லாம்
உன் நினைவுதான்
கொசுக்கள்

தமிழ் ஹைகூ - 4


இரு கைகளுக்கு நடுவே

நகர்கிறது நாட்கள்

குயவன்.

(இன்டெர்நெட்டில் வாசித்தது....)

தமிழ் ஹைகூ - 3


சுயத்தை ஒப்படைத்துவிட்ட
மடியில் தவழும் வீணை
இசைக்கிறான் கணவன்

தமிழ் ஹைகூ - 2


உச்சி வெயில்
மரத்தடி நிழல்
குடைக்கேங்கும் மரம்

தமிழ் ஹைக்கூ - 1


முகம் பார்க்கும் நிலவை
முத்தமிட்டு உடைக்கும்
கரையோரத் தவளைகள்

இறப்பு எங்கள் பிறப்புரிமை..._ அப்துல்ரகுமான்

ஆலகாலத்திற்கே
பாற்கடல் கடைந்தோம்
அமுதம் வந்தது

அவசரமாய் குடித்தோம்
விக்கிச் செத்தோம்



"ரத்தம் சிந்தி பெற்ற சுதந்தைரத்தை நாம் பாழ்படுதியதை கவிஞ்ஞர் சாடுகிறார்"

வீழ்ந்த தேவதைகள்। _ அப்துல் ரகுமான்



வரங்களே
சாபங்கள்
ஆகுமென்றால்
தவங்கள்
எதற்கு??????



(மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசியல்வாதிகளே மக்களுக்கு கெடுதல் செய்யும்போது தேர்தல் எதற்கு?

ஐந்தாண்டுக்கு ஒரு முறை _ அப்துல் ரகுமான்


புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டு தமயந்தி.......


(இந்த கவிதையில்
புறத்திணைச் சுயம்வரம் என தேர்தலையும்
போலி நளன்களாக அரசியல்வாதிகளையும்
குருட்டு தமயந்திகளாக மக்களையும்
சாடுகிறார் கவிஞ்ஞர்)

கவிக்கோ அப்துல் ரகுமான் _ மின்மினிகளால் ஒரு கடிதம் - 7


உன் விலாசம்
மின்னலா?
மழைத்துளியா?

என்னைப் பிடித்துண்ண
வலை பின்னிக் காத்திருக்கும்
சிலந்தி நீ

மரணத்திலிருந்து
பிழைத்து வந்தேன்
உன் நினைவு வந்தது.

கவிக்கோ அப்துல் ரகுமான் _ மின்மினிகளால் ஒரு கடிதம் - 6



பழக்கம் கொடுமையானது
சந்திப்பிலும் கூட
நான் உனக்காகக்
காத்திருக்கிறேன்

காதலைக்
கூட்டிக் கழித்தால்
கண்ணீர்தான் மிச்சம்

நீ இல்லையென்றால்
இந்தக் கவிதைகள்
என்னவாயிருக்கும்?

கவிக்கோ அப்துல் ரகுமான் _ மின்மினிகளால் ஒரு கடிதம் - 5


என் கவிதை
விசேஷ காலங்களில்
நீ உடுத்தும்
ஆடை

எரிவதில் உள்ள
சுகம்
விட்டிலுக்குத்தான் தெரியும்

தரையிலிருந்து
பொறுக்கிய காகிதத்தில்
கவிதை கிடைத்ததைப்போல்
நீ என் வாழ்கையில்

நேர்ந்தாய்.

கவிக்கோ அப்துல் ரகுமான் _ மின்மினிகளால் ஒரு கடிதம் - 4


உடைந்த கனவுகளால்
கவிதைகளைக்
கட்டுகிறேன்

வேதனையின்
இன்னோரு பெயர்தான்
காதல்

என்மேல்
உன் கண்பட்டது
அதனால் என் மேல்
உலகத்தின் கண்பட்டது.

கவிக்கோ அப்துல் ரகுமான் _ மின்மினிகளால் ஒரு கடிதம் - 3


நீ வார்தையானால்
எழுதுவேன்
என் அமர கவிதையை

நீ என்
சூரியனுக்கும் மலர்வதில்லை
சந்திரனுக்கும் மலர்வதில்லை
நீ ஒரு வாழைப் பூ

நே பேரழகியாக
ஒரு வழிதான் உண்டு
என்னைக் காதலி

கவிக்கோ அப்துல் ரகுமான் _ மின்மினிகளால் ஒரு கடிதம் - 2


நீ ஒரு கரை
நான் ஒரு கரை
இடையில் ஓடுகிறது
கண்ணீர்

கடலில் அலையெழுப்பக்
காற்று
என்னில் கவிதை எழுப்ப
நீ

சாக்கடையுலும்
பிரகாசிக்கும் நிலவாய்
என்னில் நீ.

கவிக்கோ அப்துல் ரகுமான் _ மின்மினிகளால் ஒரு கடிதம் - 1


உன் கண்
எனக்கு இமையாக
இருக்கிறது

காதல்
ஓர் அதிசய உலகம்
அங்கே
காயங்கள் பூக்களாகின்றது

நீ நதி
நான் உன்னில் விழுந்த
சருகு
நீ எங்கே கொண்டு போக்றாயோ
அங்கேதான்
நான் போக முடியும்.

அழகி


கறுப்பு வெள்ளை
புகைபடத்திலும்
வண்ண வண்ணமாய் தெரியும்
பெண் நீ.......

விஜய் கிருஷ்ணன்.

இன்றைய தேர்தல்....


இன்றைய தேர்தல்....
குருடர்களும் (ஆணையம்)
செவிடர்களும் ( அரசியல்வாதிகள்)
உமையர்களும்(மக்கள்)

சேர்ந்து...

உண்மை அரசியலுக்கு நடத்தும்
இறுதி ஊர்வலம்............???

விஜய் கிருஷ்ண்ன்.

லஞ்சம்


லஞ்சம்

பதவியில் இருப்பவன்
எடுக்கும் நாகரீக பிச்சை !

சத்யா...malini (ஆர்குட்)

ஆர்குட்டில் ரசித்த கவிதை....

ஒரு துளி கண்ணீர்
மடை திறந்த வெள்ளமென
பெருகிய எண்ணங்கள்
தேக்கங்களாய் நாவில் தங்க...
தவறிய வார்த்தைகள் கூறாத காதலை
அவள் கண்ணின் ஒரம் வழிந்த
ஒரு துளி கண்ணீர் உணர்த்தியதே


ஆர்குட்டில் வாசித்தது....