தபூ சங்கர் கவிதை - 8




நான் உனக்கு
முத்தம் கொடுத்தது தவறு என்றால்
அதற்காக
நீ ஏன் என்னை முறைக்கிறாய்


உன்னிடம் படிக்கும்
மாணவன்
தவறாக வீட்டுப்பாடம்
எழுதி வந்தால் பத்து முறை
சரியாக எழுதும்படி
இம்போசிஷன் கொடுப்பாயே......


அந்த மாதிரி
உன்னை பத்து முறை
சரியாக முத்தமிடும்படி
எனக்கு
இம்போசிஷன் கொடு............!!!!!!

தபூ சங்கர் கவிதை - 7

என்னால்
கவிதை எழுதத்தான்
முடியும்
உன்னை மாதிரி
கவிதையாகவே
இருக்க முடியாது!

தபூ சங்கர் கவிதை - 6



எப்போதும் நீ இருக்கும் இடத்தில்

காற்று வேகமாக அடித்தபடி

உன் ஆடையோடு

விளையாடுவதைப் பார்தால்

எனக்கு சந்தேகமாக இருக்கிறது

காற்று உன்னைக்

களவாடுகிறதோ என்று!!!!!!!

தபூ சங்கர் கவிதை - 5


நிலவில்
மனிதன்
வாழலாமா
முடியாதா
என்பதை அறிய
இந்த உலகம்
எவ்வளவோ
அராய்ச்சி செய்கிறது!

நீ அங்கிருந்துதானே
வருகிறாய்


அந்த உண்மையை
எனக்கு மட்டுமாவது
சொல்லேன்.........!!

தபூ சங்கர் கவிதை - 4


எனக்கு லீப்
வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்ப
பிடிக்கிறது


அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக
வாழலாம்
உன்னோடு......!

தபூ சங்கர் கவிதை - 3

பேருந்தில்
நீ எனக்காக
எடுத்துக்கொடுத்த
பயணச்சீட்டு

இன்னும்
பயணித்துக்
கொண்டிருக்கிறது
என்னோடு!!!!

தபூ சங்கர் கவிதை - 2




'' உன்னைப் பற்றி
கனவு கண்டேன்"
என்றேன்

"என்ன கனவு
சொல்.....
பலன் சொல்கிறேன் "
என்றாய்।

உன்னைப் பற்றி
கனவு காண்பதே
பலன்தானே!

தபூ சங்கர் கவிதை -1

கொலுசு,

வளையல்,

பூ,

இதெல்லாம்

உன் அழகுபரப்புச்

செயலாளர்களா?????
முன்னுரை

இந்த வலைப்பூவில் எனது தொகுப்புகள்..... உங்களுக்காக.......