சோம்பலைக் கடக்க 8 ஜப்பானிய நுட்பங்கள்

1. இகிகை - Ikigai வாழ்க்கையில் உங்கள் நோக்கத்தைக் கண்டறியவும். ஒவ்வொரு காலையிலும் நீங்கள் எழுந்திருப்பதற்கான காரணத்தை தீர்மானிக்கவும். உங்கள் பலம், உணர்வுகள் மற்றும் உலகின் தேவைகளுடன் ஒத்துப்போகும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.இதுவே வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது. 

 2. கைசன் Kaizen ஒவ்வொரு நாளும் சிறிய மேம்பாடுகளில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டியதில்லை, சிறிது சிறிதாக முன்னேறுவதை நோக்கமாகக் கொள்ளுங்கள்.

 3. பொமோடோரோ டெக்னிக் Pomodoro Technique 25 நிமிடங்கள் வேலை செய்யுங்கள், 5 இடைவெளி எடுத்து, பிறகு மீண்டும் செய்யவும். இது நீங்கள் கவனம் செலுத்தவும், சோர்வைத் தவிர்க்கவும் உதவுகிறது. இது உற்பத்தித்திறனுக்கான கேம்-சேஞ்சர்! 

 4. ஹரா ஹச்சி பு Hara Hachi Bu உங்களை நீங்களே திணிக்காதீர்கள்! நீங்கள் 80% நிரம்பும் வரை சாப்பிடுங்கள், மேலும் நாள் முழுவதும் நீங்கள் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள். 

 5. ஷோஷின் Shoshin ஒரு தொடக்க மனநிலையுடன் பணிகளை அணுகவும். கச்சிதமாக இருப்பது பற்றியோ அல்லது எல்லா பதில்களைப் பற்றியோ கவலைப்பட வேண்டாம் - புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் முயற்சிப்பதற்கும் திறந்திருங்கள். 

 6. காடு குளியல் Forest Bathing இயற்கையில் நேரத்தை செலவிடுங்கள்! இது மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் உங்கள் மனநிலையை மேம்படுத்தும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பூங்காவில் நடந்து செல்லுங்கள், புதிய காற்றை சுவாசிக்கவும், இயற்கை உங்களை ரீசார்ஜ் செய்யட்டும். 

 7. வாபி-சபி Wabi-sabi அபூரணத்தை தழுவுங்கள்! ஒவ்வொரு சிறிய விவரத்தையும் வலியுறுத்துவதற்குப் பதிலாக, முக்கியமானவற்றில் கவனம் செலுத்துங்கள் மற்றும் எளிமையில் அழகைக் கண்டறியவும். முடிந்ததை விட சிறந்தது, எனவே மேலே சென்று நடவடிக்கை எடுங்கள்! 

 8 ககைபூ Kakeibo ஒரு பட்ஜெட்டை உருவாக்கி அதில் ஒட்டிக்கொள்ளுங்கள். உங்கள் நிதி ஒழுங்காக இருக்கும்போது, ​​உங்கள் மற்ற இலக்குகளைச் சமாளிக்க நீங்கள் குறைவான மன அழுத்தத்தையும் அதிக உந்துதலையும் உணருவீர்கள்.

அரசியல்

ஒன்றின்மேல் ஒன்றைக்
குறிபார்த்து எறிந்து
குண்டு விளையாடினோம்
கோலி விளையாடினோம்

இன்று
எவரெவரோ வந்து
எறிந்து விளையாட
நாமே
குண்டானோம்.





(மு. மேத்தாவின் ஊர்வலம் புத்தகத்தில் வாசித்தது.......)

கோடும் கோலமும்

ஜனநாயகம் பரவாயில்லை
எப்போதும்
ஒரு கோட்டுக்கு
உட்பட்டே இருக்கும்

தாண்டத் தாண்டக்
கோடுகளைத்
தள்ளிப் போட்டுக்
கோண்டால் -

ஜனநாயகம் பரவாயில்லை
எப்போதும்
ஒரு கோட்டுக்கு
உட்பட்டே இருக்கும்



(மு. மேத்தாவின் ஊர்வலம் புத்தகத்தில் வாசித்தது.......)

புயலுக்கு முன்

இந்தியா என்பது நூறு கோடி
ஏழை மனங்களில் எழுதிய கனவு
இந்தியா என்பது கங்கை காவிரி
இனைந்து நடக்கிற நடைகளின் அழகு !

பச்சை வயல்களும்
பனிமலை நதிகளும்
மட்டுமல்ல
பசித்த வயிறுகளும் தான்
பாரதமாகும்


இந்தியாவின்
வாழ்க்கை பயணத்தில் இதுவரை
வழிப்போக்கர்களாகவே இருந்தோம்
எதையோ தொலைத்துவிட்ட
ஏக்க உணர்வோடு

இறுதிவரை தேடிச் செல்கிற
தேசாந்திரிகளாய்த் திரிந்தோம்

சொந்த மன்னிலேயே
அன்னியர் போல் உணர்ந்தோம்

முனு முனுப்புகளை விட்டு வந்தோம்
முசாபர்கள் போல

பெருமூச்சிகளைத் தூக்கி வந்தோம்
சுமைகூலி போல..

இது ஏழை நாடல்ல
இது ஏழைகளின் நாடல்ல !

இந்தியா இனியொரு
பெரிய குருசெத்திரத்தில் பரவேசிக்கட்டும்

நாம்
ஆயுதங்களைக் கீழே போடாத
அர்ச்சுனர்களாவோம்.

திக்கற்ற ஏழைகளை நடமாடும் கோவிலெனத்
திருமூலர் கூறுகின்றார்.....


ஆதலால்
குடிசைகளுக்கும் இங்கே
கும்பாபிஷேகம் நட்த்துவோம்.

சோவியத் பூமிக்குக் கடைக்கண் காட்டிய பராசக்தி
இந்தியாவுக்கு

நெற்றிக் கண்ணையே திறக்க
நேரம் பார்த்திருக்கிறாள் !

எழுந்து நின்றால் இமய மலைகள் - நாம்
படுத்திருந்தாலும் பாரத நதிகள்!

முணுமுணுப்புகள்
முழக்கங்களாகட்டும் !
பெருமூச்சிகள்
புயலாக மாறட்டும்.




(மு. மேத்தாவின் ஊர்வலம் புத்தகத்தில் வாசித்தது.......)

மீரா கவிதை-1


விழும்போதெல்லாம்
மீசையில் ஒட்டவேண்டும்
இந்த் செம்மண்;
ஏனெனில் இது எம்மண்!

தமிழ் ஹைக்கூ - 9



வெட்டிப் போட்ட
மரத்துண்டிலும்
துளிர்கள்

தமிழ் ஹைக்கூ - 8


யாருமற்ற தனிமையில்
அறைக்குள் நடனம் பயிலும்
ஊதுபத்தியின் நறுமணம்

தமிழ் ஹைக்கூ - 7


கம்பளி இருந்தும்
சளியுடன் தும்மும்
செம்மறி ஆடு...

கவிஞன் அமுத பாரதி

தமிழ் ஹைக்கூ - 6


ஐயோ இருட்டிவிட்டதே
என் செம்மறி ஆட்டை பார்த்தீர்களா
விடிந்தால் தீபாவளி

ஹைக்கூவின் வீரியம்। ஒர் உதாரணம்.

பக்கம்பக்கமாய் சிறுகதையிலும் கட்டுரையின் வாயிலாகவும் சொல்லப் படவேண்டிய ஒரு கருத்தை மூன்றே வரிகளில் சொல்லி விடலாம் என்பது தான் நம் தமிழ்ஹைக்கூவின் மிகப்பெரிய பலம். அதுவும் கூட அதே கோபத்துடனும் அதே வீரியத்துடனும் சொல்லிவிட முடியும் என்பதற்கு இந்த கவிதை சாட்சி,

இட ஒதுக்கீடு எனக்கு வேண்டாம்
வா....... வந்து
நீயே பீ அள்ளு.
- திண்டுக்கல்.தமிழ்பித்தன்